பொது செய்தி

இந்தியா

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அரிசியை வாங்கும் சீனா!

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
பீஜிங்: உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளரான சீனா, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2019 - 20 நிதி ஆண்டில் ரூ.31 ஆயிரம் கோடிக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல்
Rice, india, china,  அரிசி, இந்தியா, சீனா, ஏற்றுமதி, இறக்குமதி,

பீஜிங்: உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளரான சீனா, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2019 - 20 நிதி ஆண்டில் ரூ.31 ஆயிரம் கோடிக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் பாசுமதி இல்லாத அரிசி ரூ.8,903 கோடிக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. அதே போல் உலகளவில் அதிக அரிசி இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. 40 லட்சம் டன் அரிசியை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கின்றது. ஆனால் இந்திய அரிசி தரமில்லை என காரணம் காட்டி பல ஆண்டு காலமாக வாங்காமல் இருந்தது. தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.


latest tamil news


தற்போது அந்நாடுகளில் விளைச்சல் குறைந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. முக்கிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் சீனாவுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை. எனவே இந்தியாவிடமிருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அரிசி இறக்குமதி செய்து வருகிறது. லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் நடந்து பதட்டமான சூழல் தணியாத நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதிக்கு சீன ஒப்பந்தம் செய்துள்ளதாக அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. ஒரு டன் சுமார் ரூ.22,000 என்ற குறைந்த விலைக்கு தருகின்றனர். தரத்தை பார்த்த பிறகு அடுத்த ஆண்டு இன்னமும் கூடுதலாக இறக்குமதி செய்வார்கள் என தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
03-டிச-202012:10:11 IST Report Abuse
pattikkaattaan சீன அதிபரை மகாபலிபுரம் கூட்டிவந்து நம்ம பிரதமர் விருந்து வைத்தார் .. ஆனால் அவர்கள் நமக்கே இரண்டகம் செய்தார்கள் .. இதில் அரிசி வேறு கொடுக்கவேண்டுமா ?..
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
03-டிச-202012:05:35 IST Report Abuse
pattikkaattaan எதற்க்காக சீனாவுக்கு ஒரு டன் அரிசி 22000 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்?.. இந்திய அரிசிக்குத்தான் விலை அதிகம் .. ஏனென்றால் அதன் தரம் மற்றும் சுவை காரணமாக அதிக விலைக்கு உலகநாடுகளில் விற்கப்படுகிறது.. ஓமான் நாட்டில் ஒரு கிலோ இந்திய பாசுமதி அரிசி ரூ 200 வரை விற்கப்படுகிறது .. பாகிஸ்தான் பாசுமதி அதில் பாதி விலைக்கு கிடைக்கிறது .. விலையை உயர்த்தி விற்பனை செய்யுங்கள் இந்திய அரசே .. இன்னொன்று நம்மிடம் வாலாட்டுபவனுக்கு நாம் ஏன் அரிசி கொடுக்கவேண்டும் ?..
Rate this:
Cancel
03-டிச-202011:55:08 IST Report Abuse
தமிழ் இவனுக்கு வேணும்னா .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X