பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,398 பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,2) 1,398பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.62 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,421 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,84,747ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 221 ஆய்வகங்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,2) 1,398பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.62 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,421 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,84,747ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 221 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-154) மூலமாக, இன்று மட்டும் 68,388 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 93 ஆயிரத்து 913 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 897 பேர் ஆண்கள், 531பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,74,195 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,10,518 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 62ஆயிரத்து 015ஆக உள்ளது.


latest tamil news




இன்று மட்டும் கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்தனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,733 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,999 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news




latest tamil news







Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Rao - Detroit,யூ.எஸ்.ஏ
03-டிச-202006:57:08 IST Report Abuse
R Rao நிறைய கொரோன நோயாளிகள் நலமுடன் வீடு திரும்புவது சந்தோஷமான செய்தி. இவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கிறார்கள் என்று வெளியிட்டால் எல்லோரும் பயன் பெறுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X