சென்னை: சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டியளித்தார் காங். மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ்.
புதுச்சேரியில் தி.மு.க., காங்., இடையேயான அரசியல் சூழல் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தமிழக காங்.,மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர் துரை முருகன் ,தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். .
![]()
|
இந்த சந்திப்பிற்கு பின் திணேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி, வரப்போகும் தமிழக, புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் பிரசாரம் குறித்து ஸ்டாலினுடன் விவாதித்தோம். தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. விரைவில் ராகுல் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகை தர உள்ளார். அதில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE