கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார்: பஞ்சாப் முதல்வர்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
அமிர்தசரஸ்: கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாக போட்டுக்கொள்ள தயாராக உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மாநிலத்தில் பயன்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ,

அமிர்தசரஸ்: கொரோனா தடுப்பூசியை முதல் ஆளாக போட்டுக்கொள்ள தயாராக உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மாநிலத்தில் பயன்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதல்வர் , ஐ.சி.எம்.ஆரின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசியை மாநிலத்தில் முதல் ஆளாக போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து மாநில சுகாதார செயலாளர் ஹூசன்லால் கூறுகையில் மாநில மக்கள் தொகையில் சுமார் 23 சதவீதம் பேருக்கு தடுப்பூசி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் படி தடுப்பூசி போடப்படும். சுகாதாரபணியாளர்கள் முன்களபணியாளர்கள் , ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நோயுற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.


latest tamil news



தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில்உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 20 ம் தேதி ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் மற்றவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தன்னார்வ தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்பதற்காக நான் முன்வந்தேன் என கூறி இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202011:31:03 IST Report Abuse
இராமன் இத போட்டுகிறதல என்ன சாதனை என்று கொஞ்சம் சொல்லு.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
03-டிச-202011:30:45 IST Report Abuse
Sivaraman விவசாயிகளின் போராட்டம் என்றால் இவரை மறக்க முடியாது
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
03-டிச-202011:26:53 IST Report Abuse
Sivaraman விவசாயிகளை இறக்கிவிட்டதுடன் அவர்களுக்கு உடனே தடுப்பூசியை பயன் படுத்தவோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X