கல்வான் தாக்குதல் சீன அரசால் திட்டமிடப்பட்டது - அமெரிக்க ஆணையம் அறிக்கை

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன்: 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான கல்வான் தாக்குதல் சீன அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என அமெரிக்க ஆணையம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. லடாக்கின் இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ளது கல்வான் பள்ளதாக்கு. இந்திய பகுதியான இதனை முழுவதுமாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஜூன் 15-ம் தேதி இங்கு இரு நாட்டு வீரர்களிடையே மோதல்

வாஷிங்டன்: 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான கல்வான் தாக்குதல் சீன அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என அமெரிக்க ஆணையம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.latest tamil newsலடாக்கின் இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ளது கல்வான் பள்ளதாக்கு. இந்திய பகுதியான இதனை முழுவதுமாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஜூன் 15-ம் தேதி இங்கு இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன ராணுவம் தரப்பிலும் கனிசமானோர் பலியாகினர். அது பற்றிய தகவலை அந்நாடு மூடி மறைத்துவிட்டது.

இத்தாக்குதல் சீன அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒன்று என அமெரிக்க - சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையம் 2000-ம் ஆண்டில் அமெரிக்க பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இவ்வாணையம் ஆண்டறிக்கை தாக்கல் செய்யும்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 8 மாதங்கள் நீடித்த இந்திய-சீன மோதல் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமானது. இதனை சீன அரசாங்கம் திட்டமிட்டதாக சில நிகழ்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, மோதலுக்கு பல வாரங்களுக்கு முன்னர், சீன பாதுகாப்பு அமைச்சர், ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக சண்டையைப் பயன்படுத்தும்படி அறிவித்திருந்தார். சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸில், அமெரிக்கா - சீனா போட்டியில் இந்தியா ஈடுபட்டால், சீனாவுடனான அதன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவு மோசமான அடியை சந்திக்கும் என்றது.

மே மாத தொடக்கத்தில் நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பல செக்டார்களில் தொடர்ச்சியான மோதல்கள் நிலவியது. அதனைத் தொடர்ந்து நடந்த கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மோதலின் குறிக்கோள் பிரதேசத்தை பெறுவது ஆகும். சீனா இத்தாக்குதலை வெற்றியாக கருதுகிறது.


latest tamil newsஇந்தியா தனது பகுதியில் ஏற்படுத்தி வரும் கட்டமைப்புகளை தடுக்கவோ அல்லது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பதை எச்சரிக்கவோ இத்தாக்குதல் நடந்திருக்கலாம். ஆனால் அதில் சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை. சீனா - இந்தியா இடையே பல ஆண்டுகளாக நேரடி மோதல் இருந்துள்ளது. அதிபர் ஜி ஜிங் பிங் 2012-ல் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இரு நாடுகளும் தங்கள் எல்லையில் ஐந்து பெரிய மோதல்களைக் கண்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
03-டிச-202014:20:40 IST Report Abuse
Amirthalingam Shanmugam பிள்ளையையும் கிள்ளிவிட்டு ..தொட்டிலையும் ஆட்டினானாம். இந்த போக்கு எங்கபோய் முடியுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02-டிச-202021:36:43 IST Report Abuse
Arul Narayanan Galwan is not on the border. It is deep inside India. Border is several hundred miles away.
Rate this:
Cancel
02-டிச-202020:56:48 IST Report Abuse
ஆப்பு சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி பண்ணுவோம்.
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
03-டிச-202009:10:05 IST Report Abuse
mindum vasanthamஅவனுங்க நமக்கு அதிகம் பொறுக்க ஏற்றுமதி செய்கின்றனர் , நம் அரிசி ஏற்றுமதி இங்கே விவசாய்க்கு தான் நன்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X