சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நடிகர் ரஜினிகாந்த்: ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள், அவர்களது கருத்துகளை தெரிவித்தனர். அரசியல் நிலைப்பாடு குறித்து, என் பார்வையை விளக்கி கூறினேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், உங்களுடன் இருப்போம் என, அவர்கள் தெரிவித்தனர். என் முடிவை, விரைவில் அறிவிப்பேன்.டவுட் தனபாலு: எந்த முடிவுமே எடுக்காத ஒரு முடிவை அறிவிக்க, ஏன் இப்படி ஜவ்வு மாதிரி இழுக்குறீங்க...


'டவுட்' தனபாலு

நடிகர் ரஜினிகாந்த்: ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள், அவர்களது கருத்துகளை தெரிவித்தனர். அரசியல் நிலைப்பாடு குறித்து, என் பார்வையை விளக்கி கூறினேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், உங்களுடன் இருப்போம் என, அவர்கள் தெரிவித்தனர். என் முடிவை, விரைவில் அறிவிப்பேன்.

டவுட் தனபாலு: எந்த முடிவுமே எடுக்காத ஒரு முடிவை அறிவிக்க, ஏன் இப்படி ஜவ்வு மாதிரி இழுக்குறீங்க... ஒருவேளை, அண்ணாத்த படம் வெளியாகி, ஓடுற வரைக்கும், இப்படி டெம்போவை ஏத்திட்டே இருக்கலாம்னு பிளான் வச்சிருக்கீங்களோன்னு தான், 'டவுட்'டா இருக்குது...!


காங்கிரஸ் எம்.பி., ராகுல்:
தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சியில் இல்லை என்றாலும், வலிமை மிக்க இயக்கமாக காங்கிரஸ் உள்ளது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக, கட்சி மேலும் வலிமை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படும் வகையில், வரும் தேர்தலில், காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அது சரி... 50 வருஷமா, ஆட்சியில இல்லாம போனதுக்கு காரணம் தெரியுமா...? உங்க குடும்ப தலைமைக்கு, யாரும் போட்டியா வந்துடக் கூடாதுன்னு, காமராஜர் மாதிரி மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களை, ஓரங்கட்டியது தான் காரணம்... இந்த உண்மையை நீங்க உணராத வரைக்கும், 50 வருஷம் இல்லை, 500 வருஷமானாலும், தமிழகத்துல காங்கிரஸ் ஆட்சி அமையாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை...!


முதல்வர் இ.பி.எஸ்.:
ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை, நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். பாராட்ட மனமில்லை என்றாலும், பழி சுமத்தாமல் இருந்தாலே போதும். இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். அரசு சிறப்பாக செயல்பட்டதற்காக, எவ்வளவோ விருதுகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். அவர் வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை வந்து பார்த்தால் தானே, என்ன நடக்கிறது என்பது தெரியும்.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சின்னா குற்றம், குறை சொல்லத்தான் செய்வாங்க... உங்களை பாராட்டி தள்ளினா, அவங்க எதிர்க்கட்சி இல்லை... கூட்டணி கட்சி... ஸ்டாலினே, பாவம், கொரோனா பயத்துல வீட்டுக்குள்ள இருக்கார்... அவரை வெளியில வாங்க வாங்கன்னு, சீண்டுறது சரியாங்கிறது தான், எங்களோட, 'டவுட்!'

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
03-டிச-202009:08:00 IST Report Abuse
கல்யாணராமன் சு. நடுநிலையாளர்களுக்கு ஒரு பெரிய டவுட் உண்டு... பத்திரப்பதிவு... போக்குவரத்து ...... மற்றும் பொதுப்பணித்துறையில் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிப்பதற்கு EPS என்ன செய்தார் ... அதிமுக அரசு என்ன செய்திருக்கிறது என்பதுதான் அந்த டவுட் ...... அதற்கு EPS இடமிருந்து ஏதேனும் உருப்படியான பதில் கிடைக்குமா? .....
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-டிச-202006:02:41 IST Report Abuse
D.Ambujavalli அவர் இன்னும் முதல்வராகவோ, அமைச்சராகவோ இல்லை வந்த பிறகுதானே என்ன செய்தார் என்று கணக்கெடுக்க முடியும்? நீங்கள் ஒன்பது வருஷத்தில் செய்ததைக் காட்டித்தான் மக்கள் முன் நிற்க வேண்டும் மீடியாவின் எல்லா அம்சங்களையும் மக்கள் கவனித்து உங்கள் ‘வள்ளலை’ அறிந்து கொள்கையில் சும்மா விருது பெருமையெல்லாம் விலை போகாது அரியர்ஸ் ஆல்பாஸ் அறிவித்து, நீதிமானாக கூட்டு வாங்கி, மாணவர்களையும் குழப்பி, விளம்பரம் மட்டும் தேடி, எதை சொல்ல ?
Rate this:
Cancel
03-டிச-202002:51:06 IST Report Abuse
மோகனசுந்தரம் தமிழர்களை அடிளாக்கி விளையாடியது போதும். உன்னை நம்பி நாங்கள் ஏமாந்தது தான் மிச்சம். நீ ஒரு மண் குதிரை என்று எப்போதோ நிரூபித்து விட்டாய். இனியும் பீலா விட்டு திரிய வேண்டாம். உன்னைஎல்லாம் நம்பினோமே எங்களை செருப்பால அடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X