டிச., 3, 2010
ஆந்திர மாநிலம், நெல்லுாரில், 1922 ஏப்., 16ம் தேதி பிறந்தவர், அனுத்தமா. இயற்பெயர், ராஜேஸ்வரி பத்மநாபன். தமிழில் சிறுகதைகள் எழுதத் துவங்கினார். சொந்த முயற்சியில் ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளைக் கற்றார். தன், 25வது வயதில், எழுத்து துறைக்குள் முழுமையாக நுழைந்தார்.இவரது எழுத்துப் பணிக்கு மாமனாரும், கணவரும் உறுதுணையாக இருந்தனர். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். 'தமிழகத்தின் ஜேன் ஆஸ்டென்' என, புகழப்படுகிறார். இவரது நுால்கள் கன்னடம், ஹிந்தி மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் விருது உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 2010 டிச., 3ம் தேதி, தன், 87வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் அனுத்தமா காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE