எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு

Updated : டிச 04, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சிகாகோ : அமெரிக்காவில், எச் - 1பி விசாவுக்கு, டிரம்ப் நிர்வாகம் விதித்த புதிய கட்டுப்பாடுகளை, கலிபோர்னியா நீதிமன்றம், நிராகரித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர். அமெரிக்காவில், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த வெளிநாட்டினர், 85 ஆயிரம் பேருக்கு, ஒவ்வொரு ஆண்டும், எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.மக்கள் நலன்மூன்று
எச் - 1பி, விசா, கட்டுப்பாடு, இந்தியர்கள், நிம்மதி, பெருமூச்சு

சிகாகோ : அமெரிக்காவில், எச் - 1பி விசாவுக்கு, டிரம்ப் நிர்வாகம் விதித்த புதிய கட்டுப்பாடுகளை, கலிபோர்னியா நீதிமன்றம், நிராகரித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்.

அமெரிக்காவில், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த வெளிநாட்டினர், 85 ஆயிரம் பேருக்கு, ஒவ்வொரு ஆண்டும், எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.


மக்கள் நலன்மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விசாவை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். அமெரிக்காவில், இந்த விசாவில் பணியாற்றுவோரில், ஆறு லட்சம் பேர், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலால், அமெரிக்காவில், பொருளாதாரம் நசிந்து, வேலையில்லா பிரச்னை அதிகரித்தது. உள்ளூர் அமெரிக்கர்கள் பலர் வேலைகளை இழந்தனர்.இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, எச் - 1பி விசா வினியோகத்தை, இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து, கடந்த ஜூனில் உத்தரவிட்டார். இதன்படி, கடந்த அக்டோபரில், எச் - 1பி விசா பெறுவோருக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திறமையான மற்றும் தகுதியுடைய வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு மட்டுமே, எச் - 1பி விசாவழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


விசாரணைமேலும், அதிக சம்பளத்திற்கு மட்டுமே, வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்த, அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளால், புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களில், மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, விசா கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு, கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெப்ரி வைட், எச் - 1பி விசா பெறுவோருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.


'நாஸ்காம்' வரவேற்பு


எச் - 1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அமெரிக்காவிற்கு, இதுபோன்ற விசா திட்டங்கள்எவ்வளவு முக்கியம் என்பதை, நீதிமன்றம் தெளிவாக்கிவிட்டது' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
03-டிச-202005:26:37 IST Report Abuse
spr "கொரோனா வைரஸ் பரவலால், அமெரிக்காவில், பொருளாதாரம் நசிந்து, வேலையில்லா பிரச்னை அதிகரித்தது. உள்ளூர் அமெரிக்கர்கள் பலர் வேலைகளை இழந்தனர்.இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, எச் - 1பி விசா வினியோகத்தை, இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து, கடந்த ஜூனில் உத்தரவிட்டார். இதன்படி, கடந்த அக்டோபரில், எச் - 1பி விசா பெறுவோருக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திறமையான மற்றும் தகுதியுடைய வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு மட்டுமே, எச் - 1பி விசாவழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது." இதுதான் உண்மையென்றால், இதில் தவறேதுமில்லையே பாவம் அமெரிக்க மக்களுக்கு நல்லது செய்தும் ட்ரம்ப் நாசமாகிப் போனார்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-டிச-202005:20:45 IST Report Abuse
Bhaskaran நம் அரசியல்வாதிகள் மாதிரி மண்ணின் மைந்தர்களுக்கே வேலை அப்படீன்னு டிரம்ப் ஸ்டண்ட் அடிச்சுப்பார்த்தார் .ஆனால் அமெரிக்காவில் அனைவரும் குடியேறிகள்தாங்கிறதை மறந்துட்டார் போலும் .அம்மண்ணின் மைந்தர்கள் இன்னும் மிச்சம் இருக்கும் செவ்விந்தியர்களின் வம்சாவளியினர்தான்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-டிச-202006:29:43 IST Report Abuse
 Muruga Velட்ரம்ப் மனைவியும் வெளி நாட்டிலிருந்து குடியேறியவர் .. இவர் போட்ட ரூல் படி அம்மணி அமெரிக்காவில் இருக்க தகுந்த தகுதிகள் இல்லை .....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
03-டிச-202011:53:51 IST Report Abuse
Balajiஇதை எத்தனை வருடம் சொல்லிக்கொண்டிருப்போம்? அங்கிருக்கும் வெள்ளையர்கள் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக அங்கிருப்பவர்கள் வழி வந்தவர்கள். அவர்கள் மண்ணின் மைந்தர்கள் ஆக இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் உங்கள் கணக்குப்படி?...
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
03-டிச-202000:59:09 IST Report Abuse
அன்பு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X