அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்'

Updated : டிச 04, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
சென்னை,: ''தமிழக அரசியல் களத்தில், களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவான, இந்த ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற, தேர்தல் பிரசார கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:கடந்த, ஒரு வாரமாக, டில்லி கொந்தளிப்பாக இருக்கிறது.
அ.தி.மு.க., ஆட்சி, தி.மு.க., ஸ்டாலின்

சென்னை,: ''தமிழக அரசியல் களத்தில், களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவான, இந்த ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற, தேர்தல் பிரசார கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த, ஒரு வாரமாக, டில்லி கொந்தளிப்பாக இருக்கிறது. விவசாயிகள் இரவும், பகலுமாக போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களால், வேளாண்மை சிதைந்து போகிறது.

அந்த மூன்று சட்டங்களையும், மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை, நான் சொன்னதால், 'ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது; ஸ்டாலின் என்ன விவசாயியா' என, முதல்வர் கேட்டார். நான் விவசாயியும் அல்ல; விவசாயம் செய்ததாகச் சொல்லவும் இல்லை.
ஆனால், விவசாயம் செய்து வருவதாக சொல்லும் முதல்வருக்கு தான், விவசாயம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. நான் சொன்னதை தான், பஞ்சாப், உ.பி., - ம.பி., ராஜஸ்தான் விவசாயிகள் சொல்கின்றனர்.

இது பற்றி, முதல்வர் என்ன பதில் சொல்வார்; பஞ்சாப் விவசாயிகளுக்கு விவசாயம் தெரியவில்லை என்பாரா?எல்லா நிலத்திலும் பயிரும் இருக்கும்; களையும் இருக்கும். ஒரு விவசாயி, அந்த களையை, முதலில் எடுத்துக் களைவார். பின், பயிர் சரியாக வளரும். அதேபோல், தமிழக அரசியல் களத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவான, இந்த ஆட்சியாளர் என்ற களையை, தேர்தலில் களையெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.



Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
04-டிச-202001:51:14 IST Report Abuse
Muthuraman ஸ்டாலின் சார் சொன்னது போல் பயிரில் களை எடுக்க வேண்டியது தான்... ஆனால் அது தி மு க கட்சியில் தான்..அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நடக்காத அட்டூழியமா..கட்டப்பஞ்சாயத்தா..சொத்துக்களை பறிமுதல் செய்து ஆலவட்டம் போட்டதா...எதை சொல்ல.? ஸ்டாலின் சார் தமிழக அரசை குறை கூறுவது சாத்தான் வேதம் ஊதுவது போல தான்..ஆனால் ஒன்று சார்...நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பக்தி வேஷங்கள் போட்டாலும் இந்த முறை என்ன எந்த முறையிலும் கோட்டையை பிடிக்க முடியாது சார்...மக்கள் இப்போது அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் சார்...பேசாமல் நீங்களும் உங்கள் கட்சிகார்களும் பத்து தலைமுறைக்கு சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் சார்...முதலில் அந்த வேலையை பாருங்கள். உங்களுக்கு ஏன் யாரும் எப்போதும் உண்மையை சொல்வதில்லை..விவசாய போராட்டங்களில் உள்ள முக்கால் வாசி பேர் இடை தரகர்களும் பெரும் கோடௌன் முதலாளிகளும் பெரிய நிலச்சுவான்தார்களும் காங்கிரெஸ்க்காரர்களும் கம்யூனிஸ்டுகளும் தான் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை..சாதாரண விவசாயிகள் இப்போதாவது நன்கு பிழைக்க விடுங்கள் சார்...அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கவேண்டாம் சார்..
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
03-டிச-202022:01:22 IST Report Abuse
Vijay D Ratnam எம்ஜிஆர் தமிழ்நாட்டுக்கு தமிழர்களுக்கு செய்த மாபெரும் தவறு என்றால் அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் போன்ற நேர்மையானவர்கள் இருந்தபோது திருட்டு ரயிலேறி பட்டணத்துக்கு பொழப்பு தேடி வந்தவரை முதலமைச்சர் ஆக்கியது.
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
03-டிச-202021:41:17 IST Report Abuse
R.MURALIKRISHNAN இங்க திமுக ன்னு ஒரு கட்சிய வெச்சிருந்தாங்களே அத இப்ப யாரு வெச்சிருக்காங்கண்ணே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X