'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சி.பி.ஐ.,- அமலாக்கத்துறைக்கு கோர்ட் கெடு

Updated : டிச 04, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி :முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீதான, 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கில், விசாரணை தாமதமாவதற்காக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு கெடு விதித்தார்.காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம்
ஏர்செல், மேக்சிஸ், நீதிபதி , அதிருப்தி

புதுடில்லி :முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீதான, 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கில், விசாரணை தாமதமாவதற்காக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு கெடு விதித்தார்.

காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தார்.அப்போது, தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்த, 'மேக்சிஸ்' மற்றும் தமிழகத்தை சேர்ந்த 'ஏர்செல்' நிறுவனங்களுக்கு இடையே, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில், அன்னிய முதலீடு பெறப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியுடன், அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தில் முறைகேடாக அனுமதி பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதன் விசாரணையை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு, டில்லி நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் நேற்று நடந்தது.அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாகத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'ஐரோப்பிய நாடான, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அதிகாரிகளிடம், இந்த வழக்கு தொடர்பாக, சில தகவல்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.

'இதுவரை, தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணையை முடிக்க, கால அவகாசம் தேவை' என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, நீதிபதி உத்தரவிட்டதாவது:இந்த வழக்கு விசாரணை முடியாமல் காலதாமதம் ஆகிறது. விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு இல்லையா என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதன் விசாரணையை முடிக்க, மேலும் இரண்டு மாத, அவகாசம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி, 1ல் நடக்கும் விசாரணையின் போது, மேலும், கால அவகாசம் கேட்க கூடாது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
03-டிச-202021:32:18 IST Report Abuse
sankaseshan British government and other European countries will not co-operative as these looters have connections there . This is the reason they look evasive .
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
03-டிச-202017:41:24 IST Report Abuse
Chowkidar NandaIndia தாமதப்படுத்துகிறார்கள் என்று சொல்லி தாமதமாக வழக்கை நடத்த தேதி கொடுத்துள்ளாரே நீதிபதி. எப்படியோ, கல்லாப்பெட்டியின் ... இன்னும் இரண்டு மாதத்திற்கு தேயாது. வாழ்க அம்பேத்கரின் அருமையான நீதி.
Rate this:
03-டிச-202019:06:51 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு உனக்கு எல்லையை பாதுகாக்க முடியவில்லை பேர் CHOWKIDAR , ஆதாரம் இல்லை என்று சொல்லுபவன் பேர் CBI இதற்க்கு ஏன் மாரத்தான் எல்லாம் செய்து சுவர் ஏறி குதித்து கைது செய்து இப்போ ஆதாரம் இல்லை என்று இளைப்பு...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
04-டிச-202014:12:19 IST Report Abuse
Chowkidar NandaIndiaதேர்தலுக்கு தேர்தல் படுதோல்வி ஆனால் உனக்கு பேர் வெற்றிக்கொடி கட்டு. ரபில், ஊழல் என்று ரீல் விட்டவன் பின்னாளில் நீதிமன்ற படியேறி மன்னிப்பு கேட்டது வரலாறு. வீட்டை உள்ளே தாழ் போட்டுக்கொண்டு உத்தமன் வேஷம் போட்டவன் நிறம் வெளுத்து நாளாச்சு. போக போக தெரியும் இந்த ஊழல்பேர்வழியின் வண்டவாளங்கள். கவலை வேண்டாம்....
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-டிச-202016:40:18 IST Report Abuse
Allah Daniel இந்த தேச துரோகியையும் அவனது தறுதலை மவனையும், லட்ச ஓட்டில் ஜெயிக்கவச்ச டுமிலங்களை என்ன சொல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X