பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் பிரச்னை: கனடா முதலைக் கண்ணீர்

Updated : டிச 04, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை இந்தியா அளிப்பதற்கு, உலக வர்த்தக அமைப்பில், கனடா பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கனடாவின் இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்துள்ளது.மத்திய அரசின் மூன்று வேளாண்
விவசாயிகள், பிரச்னை, கனடா, முதலைக் கண்ணீர், ஆதார விலை, எதிர்ப்பு

புதுடில்லி : பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை இந்தியா அளிப்பதற்கு, உலக வர்த்தக அமைப்பில், கனடா பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கனடாவின் இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் என்பதே, அவர்களுடைய முக்கிய கவலையாகும்.ஆனால், 'அது கைவிடப் படாது' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.




கடும் கண்டனம்



இந்நிலையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள், கனடாவில் கொண்டாடப்பட்டது. கனடாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.அதில், சீக்கியர்கள் அதிகம் உள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என, வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் பிரச்னையில், கனடா இரட்டை வேடம் போட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து, வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமைச்சரவையில்கூட, சீக்கியர் உள்ளனர். அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில், கனடா பிரதமர் இவ்வாறு பேசியிருக்கலாம். ஆனால், விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பில், கனடா பலமுறை குரல் கொடுத்துள்ளது.




சாத்தியமில்லை



உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில், 10 சதவீதத்துக்கு மட்டுமே, குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதற்கு சாத்தியமில்லை.அதையடுத்து, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இணைந்து போராடி, 2013ல், உலக வர்த்தக அமைப்பின் சட்டத்தில், ஒரு அமைதி பிரிவை இடம்பெற வைத்தன. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு, குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க முடியும்.அதேபோல், விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்வதற்கும், உலக வர்த்தக அமைப்பின் சட்டத்தில், சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு கொள்முதல் செய்வதுடன், அதிக அளவுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுகிறது.இந்திய அரசின் இந்த கொள்கைகளுக்கு, வளர்ந்த நாடுகளான, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகியவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.குறிப்பாக, கடந்த, 2018 - 19ல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக அளவு மானியம் கொடுத்ததாக, இந்தியா மீது, இந்த நாடுகள், உலக வர்த்தக அமைப்பில் புகார் கூறின.




அதிக மானியம்



இந்தியா இவ்வாறு அதிக அளவுக்கு மானியம் கொடுப்பதால், தங்களுடைய நலன் பாதிக்கப்படுவதாக, இந்த நாடுகள் கூறுகின்றன.அதாவது விவசாயிகளுக்கு மத்திய அரசு அதிக மானியம் கொடுத்து, கொள்முதல் செய்தால், தங்கள் நாடுகளின் உணவுப் பொருட்கள் இறக்குமதி நடக்காது என்பதே, இவர்களுடைய முதலைக் கண்ணீருக்கு காரணம்.இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பரில் மத்திய அரசின் உணவு மானியத்தை எதிர்த்து, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்பின. இவ்வாறு பலமுறை, கனடா இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது. மேலும் தன் கூட்டாளிகளுக்காகவும் இந்தப் பிரச்னையை, கனடா பலமுறை எழுப்பியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தொடரும் போராட்டம்



வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், தொடர்ந்து, ஏழாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹரியானா - டில்லி எல்லையில் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல், டில்லி - உத்தர பிரதேசத்தின் காஸியாபாதை இணைக்கும் சாலையில், காஜிபுர் பகுதியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் வந்த வண்ணம் உள்ளனர்.

விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடத்திய முதல் ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சு நடக்க உள்ளது. விவசாயப் பிரச்னை தொடர்பாக, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அவருடைய வீட்டில் நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், ''வேளாண் சட்டங்களை திரும்ப பெற, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்,'' என, கிரந்தி காரி விவசாய சங்கத் தலைவர் தர்ஷன் பால் கூறினார். தங்களது கோரிக்கைகளை, மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், டில்லியின் மற்ற சாலைகளையும் முடக்குவோம் என, விவசாய சங்க பிரதிநிதிகள் எச்சரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
03-டிச-202017:03:46 IST Report Abuse
Anand அவன் தேவையில்லாமல் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துக் கொண்டிருக்கிறான்.....
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202016:04:52 IST Report Abuse
Nepolian S அறிவு உள்ள படித்தவன் எச்சரிக்கை செய்கிறான்... நலம் விரும்பியவன்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
03-டிச-202013:09:22 IST Report Abuse
Amirthalingam Shanmugam கனடாவின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ , இந்தியாவின் இந்த பகிங்கிர குற்றச்சாட்டுக்கு பதில் நடவடிக்கை எடுத்துவிட்டு பின் ஆதரவு தெரிவிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X