பொது செய்தி

இந்தியா

பாதிப்பு 95 லட்சத்தை எட்டியது சிகிச்சையில் 4.28 லட்சம் பேர்

Added : டிச 02, 2020
Share
Advertisement
புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி, 95 லட்சத்தை எட்டியுள்ளது. இவர்களில், 94 சதவீதம் பேர் குணமடைந்ததால், 4.28 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும், 10.96 லட்சத்திற்கும் மேலானோரிடம் நடத்தப்பட்ட

புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி, 95 லட்சத்தை எட்டியுள்ளது. இவர்களில், 94 சதவீதம் பேர் குணமடைந்ததால், 4.28 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும், 10.96 லட்சத்திற்கும் மேலானோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 36 ஆயிரத்து, 604 பேரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 94 லட்சத்து, 99 ஆயிரத்து, 413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால், 4.28 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 4.51 சதவீதமாகும்.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கையால், தொற்றில் இருந்து, 89 லட்சத்து, 32 ஆயிரத்து, 647 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 94.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால், கடந்த, 24 மணி நேரத்தில், 501 பேர் உயிரிழந்துள்ளனர். மஹா.,வில், 95 பேரும்; டில்லியில், 86; மேற்கு வங்கத்தில், 52; சத்தீஸ்கரில், 31; ஹரியானாவில், 28; உத்தர பிரதேசத்தில், 27; கேரளாவில், 26 மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில், 21 பேரும் இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 122 ஆக உயர்ந்து உள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.வைரஸ் பாதிப்பால் மஹாராஷ்டிராவில், 47 ஆயிரத்து, 246 பேர் இறந்துள்ளனர். இதனால், இம்மாநிலம் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.கர்நாடகா, 11 ஆயிரத்து, 792 பேருடன் இரண்டாம் இடத்திலும்; தமிழகம், 11 ஆயிரத்து, 722 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.கொரோனா தொற்றை கண்டறிய, நாடு முழுதும் இதுவரை, 14.24 கோடி பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X