612 சிறுபான்மையின வேட்பாளர்கள்: பா.ஜ.,வின் வியூகம்

Added : டிச 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், புலிப்பாய்ச்சல் காட்டிய பா.ஜ., மேலிடம், அடுத்ததாக, கேரள உள்ளாட்சித் தேர்தலிலும் புதிய வியூங்களுடன் களமிறங்கியுள்ளதுதெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., அதிரடியாக களமிறங்கியது. ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என, தேசிய கட்சிகள் வாய்பிளந்தன. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு இணையாக,
 612 சிறுபான்மையின வேட்பாளர்கள்: பா.ஜ.,வின் வியூகம்

தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், புலிப்பாய்ச்சல் காட்டிய பா.ஜ., மேலிடம், அடுத்ததாக, கேரள உள்ளாட்சித் தேர்தலிலும் புதிய வியூங்களுடன் களமிறங்கியுள்ளது

தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., அதிரடியாக களமிறங்கியது. ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என, தேசிய கட்சிகள் வாய்பிளந்தன. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு இணையாக, தேசிய தலைவர்களையும், நட்சத்திர பட்டாளத்தையும், பா.ஜ., இறக்கியதைக் கண்டு, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரண்டுபோனது.

இங்கு வீதி வீதியாக மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்த நிலையில், அடுத்து, கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகங்கள், டில்லியில் வகுக்கப்பட்டு வருகின்றன.கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அணிகளின், வழக்கமான இரு முனைப் போட்டியை, துவக்கத்திலேயே மும்முனைப் போட்டியாக பா.ஜ., மாற்றியுள்ளது.

அதன்படி, இதுவரை இல்லாத வகையில், கிறிஸ்துவர்கள், 500 பேர், இஸ்லாமியர்கள், 112 பேர் என, 612 சிறுபான்மையினரை, பா.ஜ., வேட்பாளர்களாக களமிறக்க கட்சி தலைமை ஒப்புதல் தந்துள்ளது.இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மலப்புரம் பகுதியில், அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தவிர, மாநிலத்தில், 1,000 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.'முத்தலாக்' தடை சட்டம் வாயிலாக, வடமாநிலங்களில், முஸ்லிம் பெண்களிடையே ஆதரவு தளத்தை, பா.ஜ., உருவாக்கியது.உள்ளாட்சித் தேர்தலில், 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் என்பதால், சிறுபான்மையினர் அதிகம் உள்ள கேரளாவிலும், இச்சட்டத்தின் தாக்கம் கணிசமான இருக்கும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்கள் கருதுகின்றனர்,

தாங்கள், சிறுபான்மையினருக்கும் ஆதரவானவர்கள் என நிரூபிக்க, கேரள உள்ளாட்சி தேர்தலில் துணிந்து அவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.கேரளாவின் ஆறு மாநகராட்சிகளில், கடந்த தேர்தலில் பாலக்காடு மட்டுமே பா.ஜ., வசம் வந்தது. இம்முறை, திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றையும் கைப்பற்றலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றி, சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு பேருதவியாக இருக்கும் என, பா.ஜ., கணக்கிட்டுள்ளது.இதனால், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என, பலரும் கேரளாவை முற்றுகையிட்டு பிரசாரம் செய்வதற்கு, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- --நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
03-டிச-202013:58:32 IST Report Abuse
Rafi முத்தலாக் சட்டத்தினால் இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பாதிப்படைந்து விட்டதனால், அவர்கள் அனைவரும் பிஜேபி தான் எங்கள் காவலர்கள் என்று உறுதியோடு பிஜேபிக்கு வாக்களித்ததனால் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு போட்டியிட மட்டும் வாய்ப்பு கொடுப்பதில்லை. புதிய முயற்சி மாறுதல் அடைகின்ரதா? என்று கேரளா மக்கள் காத்திருக்கின்றார்கள்.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
03-டிச-202013:42:20 IST Report Abuse
thulakol மிகவும் நல்ல முயற்சி
Rate this:
Cancel
Muru Chidambaram - virudhunagar,யூ.எஸ்.ஏ
03-டிச-202010:54:55 IST Report Abuse
Muru Chidambaram தென் இந்தியாவில் தடம் பதித்தே தீருவது (குறிப்பாக தமிழ் நாடு, கேரளா) என முனைப்போடு bjp பணியாற்றி வருகிறது. இம்முறை நிச்சயம் முயற்சி பலன் அளிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X