சென்னை:பதிவுத்துறையில் பழைய பத்திரங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு, இருவர் வீதம் பணியாளர்களை அமர்த்தியுள்ளன. இவர்கள், ஸ்கேன் செய்யும் பத்திரங்களை, சார் பதிவக அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும்.
இதில், பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக, பதிவுத்துறை தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதனால், பதிவுத்துறை பிறப்பித்த சுற்றறிக்கை:வரும் மார்ச், 31க்குள் பத்திரங்களை, ஸ்கேன் செய்யும் பணிகளை முடிக்க, ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனவே, சார் - பதிவக அலுவலர்கள், காலை, 8:00 மணிக்கே பத்திர தொகுப்புகளை, ஸ்கேன் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
சரிபார்ப்பு பணியில், சார் - பதிவக அலுவலர்கள்தான் ஈடுபட வேண்டும். வேறு பணியாளர்கள் ஈடுபடக் கூடாது. சில அலுவலகங்களில் பத்திர எண்களை கூட சரி பார்க்காமல், அலுவலர்கள் அலட்சியம் காட்டுவது தெரிய வந்துள்ளது.இதுபோன்று, அலட்சியமாக செயல்படும் அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE