கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாய், சேய் மரணம்ரூ.3 லட்சம் இழப்பீடு

Added : டிச 02, 2020
Share
Advertisement
சென்னை:டாக்டர்களின் கவனக்குறைவால், பிரசவத்தின் போது, தாயும், குழந்தையும் இறந்த விவகாரத்தில், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், சத்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி சுமதி; பிரசவத்துக்காக, 2012ல், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

சென்னை:டாக்டர்களின் கவனக்குறைவால், பிரசவத்தின் போது, தாயும், குழந்தையும் இறந்த விவகாரத்தில், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சத்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி சுமதி; பிரசவத்துக்காக, 2012ல், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், சிறிது நேரத்தில், தாயும், குழந்தையும் இறந்தனர். டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கவனக்குறைவால், தன் மனைவி இறந்ததாக கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், செல்வராசு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், 'டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கவனக்குறைவால், மனுதாரர் மனைவி மற்றும் குழந்தை இறக்க நேரிட்டுள்ளது. 'எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு, 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X