மாற்றுத்திறனாளிகள் உலகை மாற்றுவோம்

Added : டிச 02, 2020
Share
Advertisement
உலகப்புகழ் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். இருக்கையை விட்டு நகல கூட முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இவரின்' கருந்துளை' தத்துவம் உலகப்புகழ் பெற்றது.இந்திய நீச்சல் வீரர் பரத்குமார், பிறவியிலேயே ஒரு கை இல்லாதவர். சர்வதேச போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட மெடல்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். திரைத்துறையில் புகழ்பெற்ற நாட்டிய கலைஞர்
 மாற்றுத்திறனாளிகள் உலகை மாற்றுவோம்

உலகப்புகழ் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். இருக்கையை விட்டு நகல கூட முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இவரின்' கருந்துளை' தத்துவம் உலகப்புகழ் பெற்றது.

இந்திய நீச்சல் வீரர் பரத்குமார், பிறவியிலேயே ஒரு கை இல்லாதவர். சர்வதேச போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட மெடல்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். திரைத்துறையில் புகழ்பெற்ற நாட்டிய கலைஞர் சுதாசந்திரன், 17வது வயதில் சாலை விபத்தில் ஒரு காலை இழந்தவர். தமிழகத்தின் மாரியப்பன் 2016ல் ரியோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். எத்தனையோ பிரபலங்கள் மாற்றுத்திறனாளிகளாய் இருந்தும் சாதனை படைத்துள்ளனர். இன்னும்படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
யார் மாற்றுத்திறனாளிதன் அடிப்படைத் தேவைகளை பிறரின் உதவியுடன் நிறைவேற்றிக்கொள்ளும் சூழலில் உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் என்பர். உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் மக்கள் மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர். இது1980 களில் 10 சதவீதமாய் இருந்தது. 2018 கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 2.2 சதவீதம். பெருகி வரும் இந்த எண்ணிக்கையால் அவர்களுக்கான சவால்களும் அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஊனத்தை ஒருகுறைபாடாக எண்ணாமல் அதனை ஒரு மாறுபட்ட திறனாக அவர்களை ஒரு மாற்றுத்திறனாளியாக இந்தசமூகம் பார்க்க வைத்திருக்கிறது. இன்று எவ்வளவோ மாற்றுத்திறனாளிகள் பிறருக்கு முன்உதாரணமாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மீதான இந்த உலகத்தின் பார்வையையே மாற்றியுள்ளனர்.


இயற்கையில் ஏற்படும் குறைபாடுபெருமூளை வாதம், குழந்தைகளின் பக்கவாதம், சிறுமூளைத்தள்ளாட்டம், தசைசிதைவுநோய், பல வகையான சின்ரோம் குறைபாடு என பலவகைகளில் பிறவி குறைபாடுகளால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இவை கருவில் இருக்கும்போதே ஏற்படும் மரபணு குறைபாடாலோ அல்லது குழந்தை பிறக்கும்போது ஏற்படும் பிராணவாயு குறைபாடாலோ ஏற்படும். இவ்வகை குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகள் போல் இல்லாமல் உடல் வளர்ச்சிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக்குறைபாடு அல்லது இவ்விரண்டும் சேர்ந்தோ காணப்படுவர். அதனால் அவர்கள் குப்புற விழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பதில் சிரமம், காலதாமதம் அல்லது குறைபாடு ஏற்படும். சிலருக்கு பார்வைத்திறன் குறைபாடு, காது கேளாமை, பேச்சுத்திறன் குறைபாடு, கற்றல், கிரகித்தல் குறைபாடுகளும் இருக்க வாய்ப்புண்டு


இடையில் ஏற்படும் குறைபாடுஇவ்வகை மாற்றுத்திறனாளிகள் உருவாக பெரும்பாலும் சாலை விபத்துகளே காரணம். கை,கால் இழந்து இயக்கம் குறைபவர்களும் உண்டு, தலைக்காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாய் ஆனவர்களும் உண்டு. பக்கவாதம், நடுக்குவாதம் போன்ற பிற நரம்பியல் நோய்களும் காரண மாக இருக்கலாம். நோயின் தன்மையைப் பொறுத்து மாற்றுத்திறனாளிகளாக ஆகிவிடுகின்றனர்.இடையில் உருவாகும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தின் தலைவர்களாய் இருந்தால் அந்த குடும்பத்திற்கு மனச்சுமையோடு,பணச்சுமையையும் அதிகரிக்கிறது. சேமிப்பை இழந்து குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிறது.


இயன்முறை மருத்துவம்ஒரு குழந்தைக்கு தலை நிற்பதிலோ, உட்காருவதிலோ காலதாமதம் ஏற்ப்பட்டால் உடனே அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரையோ அல்லது குழந்தைகள் நல பிசியோதெரபி நிபுணரையோ அணுகவேண்டும். சிகிச்சையை விரைவாக ஆரம்பித் தால் பின்னாளில் மாற்றுத்திறனாளிகள் ஆவதையோ அதன் வீரியத்தையோ குறைக்க முடியும்.குழந்தைகள் யாரையும் சார்ந்து இருக்காமல் தனித்து வாழ வழி செய்ய முடியும். விபத்தால் ஏற்படும் இயக்கமின்மையை போக்கவும் ஆரம்பத்திலேயே பிசியோதெரபி சிகிச்சையை தொடங்க வேண்டும்.செயற்கை கை,கால் பொருத்தி அதை உபயோகிப்பது, சக்கர நாற்காலிகளை யார் துணையுமின்றி உபயோகிப்பது, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவது போன்ற பயிற்சிகளை செய்யலாம். இதனால் அவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்க முடியும்.


அரசின் சலுகைகள்மாற்றுதிறனாளிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்கள், உதவிகளை மத்திய அரசு செய்கிறது. இதை என்ற இணையத்திலும் https://www.india.gov.in/topics/social-development/disabled என்ற இணைய தள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் அடையாள அட்டை, இலவச மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கை,கால்கள், மாத ஓய்வூதியம், இலவச பயண பாஸ், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வரை வழங்குகிறது. எனேபில் இந்தியா என்ற அமைப்பு (https://www.enable india.org/) மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புக்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

இயக்கமின்மையை இயங்கவைக்கும் பிசியோதெரபி மருத்துவத்தை சரியான முறையில் உபயோகித்து பிறரை சார்ந்து இருக்காமல், பிறருக்கு உதவக்கூடிய நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற வேண்டும். மாற்றுத்திறனாளிகளை சரியான முறையில் அணுகி வழிநடத்தி அவர்களை சாதனையாளர்களாய் மாற்றுவோம்.--ரா.முத்து பாண்டி குமார்பிசியோதெரபி நிபுணர்மதுரை. 76396 69009

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X