சென்னை,:சென்னை - மும்பை, திருநெல்வேலி - காந்திதாம் விழாக்கால சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
* மஹாராஷ்டிர மாநிலம், மும்பை லோக்மான்ய திலக் நிலையம் - சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே இரு மார்க்கத்திலும், தினமும் மாலை, 6:45 மணிக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் நேற்று வரை இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில் போக்குவரத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும், 31ம் தேதி; லோக்மான்ய திலக் நிலையத்தில் இருந்து, ஜன., 1 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* குஜராத் மாநிலம், காந்திதாமில் இருந்து திருநெல்வேலிக்கு, ஒவ்வொரு திங்கட்கிழமை யன்றும், அதிகாலை, 4:40 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து காந்திதாமுக்கு, வியாழக்கிழமைகளில், காலை, 7:40க்கும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள், காந்திதாமில் இருந்து, 28ம் தேதி வரையும்; திருநெல்வேலியில் இருந்து, 31ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE