அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் தேர்வு பணி அ.தி.மு.க.,வில் துவக்கம்

Updated : டிச 04, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
அ.தி.மு.க.,வில், சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு, 25 சதவீதம் வாய்ப்பு வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தல், 2021 ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. ஆளும் கட்சியான
வேட்பாளர் தேர்வு, அ.தி.மு.க.,,துவக்கம், முதல்வர் இ.பி.எஸ்.,

அ.தி.மு.க.,வில், சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு, 25 சதவீதம் வாய்ப்பு வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தல், 2021 ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல் முறையாக, அ.தி.மு.க., சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, சாதனை படைத்தது போல, 2021 தேர்தலில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதல்வர் இ.பி.எஸ்., செயல்பட்டு வருகிறார்.



வெளியாகும்


கடந்த லோக்சபா தேர்தல் கூட்டணியை தொடர, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க, தேர்தல் பிரசார வியூகம் அமைக்க, தனித்தனி குழுக்களை நியமித்துள்ளனர். வேட்பாளர் தேர்வை யும், கட்சி தலைமை துவக்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என, மாவட்ட செயலர்களிடம், பட்டியல் கேட்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியல் வந்ததும், அதை உளவுத் துறை போலீசார் கையில் கொடுத்து, அதிலுள்ளோர் பற்றிய முழு விபரத்தையும் சேகரிக்கும்படி கூற உள்ளனர்.

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ஒரு பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல்களை அலசி ஆராய்ந்து, வெற்றி வாய்ப்புள்ளவர்களை மட்டும், வேட்பாளர்களாக அறிவிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.மேலும், தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞர் பாசறையில் நிர்வாகிகளாக உள்ள, படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு, 25 சதவீதம் ஒதுக்க, கட்சி தலைமை முடிவு செய்துஉள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.


கவனம்


இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பின் நடக்க உள்ள, சட்டசபை பொதுத்தேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என்று பார்க்காமல், மக்களிடத்தில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
03-டிச-202015:36:45 IST Report Abuse
periasamy கட்சி உடையும் தருணம் ஆரம்பம் ஹை ஜாலி
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
03-டிச-202007:37:46 IST Report Abuse
Raja Vardhini நல்ல, படித்த, செல்வாக்கு மிக்க நபர்களாக பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தலில் நிறுத்துங்கள். எக்காரணம் கொண்டும் தீய திமுகவை தலையெடுக்க விடாதீர்கள்..
Rate this:
Cancel
kuppusamy - chennai,இந்தியா
03-டிச-202006:02:40 IST Report Abuse
kuppusamy அதிமுக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்க்கவேண்டும் .கட்டுசோறில் பெருச்சாளியை வச்சதுபோல் ஆகிவிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X