அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித் ஷா மறுப்பு: தொங்கலில் தே.மு.தி.க.,

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
தேர்தலுக்கு தேர்தல், பேரத்தை அதிகரித்து வரும் தே.மு.தி.க.,வை, இம்முறை, பா.ஜ., தொங்கலில் விட்டுள்ளது.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே போட்டி ஏற்படுவது வழக்கம். இதை பயன்படுத்தி, இரண்டு கட்சிகளிடமும், தே.மு.தி.க., பேரம் நடத்தும். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சியை 'கழற்றி'
 அமித் ஷா மறுப்பு: தொங்கலில் தே.மு.தி.க.,

தேர்தலுக்கு தேர்தல், பேரத்தை அதிகரித்து வரும் தே.மு.தி.க.,வை, இம்முறை, பா.ஜ., தொங்கலில் விட்டுள்ளது.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே போட்டி ஏற்படுவது வழக்கம். இதை பயன்படுத்தி, இரண்டு கட்சிகளிடமும், தே.மு.தி.க., பேரம் நடத்தும்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சியை 'கழற்றி' விட்டார். 'இனி எப்போதும், தே.மு.தி.க., வுடன் கூட்டணி கிடையாது' என்றும், ஜெயலலிதா அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., வுடன், அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, அ.தி.மு.க.,வினர், தே.மு.தி.க., உறவை விரும்பவில்லை என்பது வெளிச்சமாகியது.

இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா கூறி வருகிறார். கூட்டணியில் அதிக, 'சீட்'களை பெறுவதற்காக, பா.ஜ.,விடமும் தொடர்ந்து, தே.மு.தி.க., பேச்சு நடத்தி வந்தது. சமீபத்தில் சென்னை வந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச, பிரேமலதா, சுதீஷ் ஆகியோர், தீவிர முயற்சி செய்தனர்.

இந்த சந்திப்பை தவிர்த்த அமித் ஷா, கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., தலைமையிடம் பேசுமாறு கூறிவிட்டதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, 'தேவைப் பட்டால், தே.மு.தி.க.,வை சேர்த்துக் கொள்ளுங்கள்' எனவும், அ.தி.மு.க., தலைமையிடம், அமித் ஷா கூறியதாக தெரிகிறது. இதனால், என்ன செய்வது என தெரியாமல், தே.மு.தி.க., தலைமை அதிர்ச்சியில் உறைந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Delhi,யூ.எஸ்.ஏ
05-டிச-202022:45:12 IST Report Abuse
Rajesh தேமுதிகவை மூடிவிட்டால் பிரச்னை முடிந்துவிடும் ........இதை கட்சி மக்களுக்காக என்ன செய்தது என்பதை மக்களுக்கு விளக்கினால் நல்லது ..... இவருடைய மச்சான் ஏதாவது ஒரு மேடையில் ஏறி பேசியதை யாராவது பாத்திருக்கிறீர்கள் என்றால் சொல்லவும் ...... இம்முறையும் தேமுதிக டெபாசிட் இழக்கும்
Rate this:
Cancel
05-டிச-202017:37:49 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நோக்கம் மாறினால் அல்லல் தான் தனியாக கட்சி ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது மாபெரும் தவறு.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
05-டிச-202015:28:43 IST Report Abuse
ஜெயந்தன் இந்த முறை தேமுதிக துணிச்சலாக தனித்து நிற்கலாம்.. விஜயகாந்த் அவர்களும்... குறைந்த நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தால் போதும்...ரஜனி வீட்டுக்குப் போவதும் உறுதி.. பிஜேபியும் வழக்கம் போல நோட்டாவுடன் போட்டி போடப்போவதும் உறுதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X