பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு, கண்டுணர்வு சுற்றுலா வந்த மதுக்கரை விவசாயிகள், சூரிய உலர்கலன், ஆயில் மில் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மதுக்கரை வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணைய விவசாயிகள் குழு, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பெரும்பதிக்கு கண்டுணர்வு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.பெரும்பதி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் திருவேங்கடம், நபார்டு வங்கியின் செயல்பாடுள், கூட்டுப்பண்ணைய திட்டம் குறித்து விளக்கினார். மதுக்கரை வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாகராஜ் பேசுகையில், ''வெளி மாவட்ட அளவிலான, விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா நடப்பு ஆண்டில் இரண்டு முறை செயல்படுத்தப்படுகிறது.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி, உயர் அடர்வு முறையில் பயிர் சாகுபடி செய்தல் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது,'' என்றார்.விவசாயிகள் குழு, கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலம், எண்ணெய் உற்பத்தி, பருப்பு உடைக்கும் இயந்திரங்களை பார்வையிட்டு திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE