காலனி ரோட்டில் கழிவு நீர் தேக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலனி ரோட்டில் கழிவு நீர் தேக்கம்

Added : டிச 02, 2020
Share
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார் காலனி ரோட்டில் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், ரேஷன் கடைக்கு செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காட்டுப்புதுாரில், ரேஷன் கடைக்கு முன்பாக உள்ள காலனி ரோட்டில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் இருந்து வடிகாலில் சென்று

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார் காலனி ரோட்டில் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், ரேஷன் கடைக்கு செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காட்டுப்புதுாரில், ரேஷன் கடைக்கு முன்பாக உள்ள காலனி ரோட்டில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் இருந்து வடிகாலில் சென்று வந்தது.தற்போது, சர்வீஸ் ரோடு போடுவதற்காக, ஏற்கனவே இருந்த வடிகால் இடிக்கப்பட்டது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், வெளியே செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கி நிற்கிறது.இங்கு ரேஷன் கடை உள்ளதால், மக்கள் வந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் தேங்குவதால், துர்நாற்றம், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த, விரைவில் சர்வீஸ் ரோடு அமைத்து, கழிவு நீர் வடிகால் அமைத்துக் கொடுக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X