மேட்டுப்பாளையம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, அனுமதி வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கை மனு அனுப்ப, ஐயப்ப பக்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில், அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்க, சிறப்பு ஆலோசனைக் கூட்டம், காமராஜ் நகரில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் சமுதாயக் கூடத்தில் நடந்தது. சங்கத் தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், உமாசங்கர், சிறப்பு அழைப்பாளர் உன்னி கிருஷ்ணன் நாயர் குருசாமி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும், அனைத்து பக்தர்களையும், கேரள அரசு அனுமதிக்க வேண்டும்.
ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் அனைத்து பக்தர்களையும், அனுமதிக்க ஜனாதிபதியும், பிரதமரும் உத்தரவு வழங்க வேண்டும் என, கோரிக்கை மனு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, சுவாமி தரிசனம் செய்வது குறித்து, தமிழக முதல்வர், கேரள முதல்வருடன் பேச்சு நடத்த வேண்டும்.இந்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், அனைத்து ஐயப்ப பக்தர்கள் வீட்டிலும், விளக்கேற்றி 'நாம ஜெபம்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது கூட்டத்தில்ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர் பொருளாளர் பலராமன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE