பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் ஆர்வமுடன் கற்கும் முதியவர்கள்

Added : டிச 02, 2020
Share
Advertisement
சூலூர் : 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தின் கீழ் பாடம் படிக்க, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் முதியவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, எழுத்தறிவிக்கும் வகையில், 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம், 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு எழுத, நடக்க

சூலூர் : 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தின் கீழ் பாடம் படிக்க, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் முதியவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, எழுத்தறிவிக்கும் வகையில், 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம், 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு எழுத, நடக்க கற்பிக்கப் படுகிறது. சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபுத்தூர் துவக்கப்பள்ளியில் உள்ள மையத்தில் பாடங்கள் கற்பிக்கும் பணி துவங்கியது. தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார்.ஆசிரிய பயிற்றுனர் ராம் பிரகாஷ், பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.

இதேபோல் பூராண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., கந்தசாமி பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் கீதா, வட்டார வள மைய மேற்பார்வை யாளர், ஊராட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதியவர்கள் பலர் ஆர்வத்துடன் எழுதி படித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X