அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவக்கம்: 'டீல்' ஏற்படாததால் காங். வருத்தம்

Updated : டிச 04, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (23+ 38)
Share
Advertisement
தி.மு.க., - காங்., கூட்டணி பேச்சு, சென்னையில் நேற்று துவங்கியது. தினேஷ் குண்டுராவ் - ஸ்டாலின் இடையே நடந்த இப்பேச்சில், கூட்டணி குறித்து, 'டீல்' ஏற்படவில்லை என, தெரிய வந்துள்ளது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்., தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர், நேற்று மாலை, தி.மு.க., அலுவலகமான
 தி.மு.க., கூட்டணி பேச்சு, டீல், காங்கிரஸ், வருத்தம்

தி.மு.க., - காங்., கூட்டணி பேச்சு, சென்னையில் நேற்று துவங்கியது. தினேஷ் குண்டுராவ் - ஸ்டாலின் இடையே நடந்த இப்பேச்சில், கூட்டணி குறித்து, 'டீல்' ஏற்படவில்லை என, தெரிய வந்துள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்., தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர், நேற்று மாலை, தி.மு.க., அலுவலகமான அறிவாலயம் சென்றனர். அங்கு, ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் நேரு, துணை பொதுச்செயலர் பொன்முடி ஆகியோரை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. வெளியில், தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:தமிழக காங்., மூத்த தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நவ., 30ல் ராகுல் ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகத்திற்கு ராகுல் பிரசாரம் செய்ய வருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், காங்., அலுவலகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில், இன்று நடக்க உள்ளது. அதில், ராகுல் பிரசார பயணத்தை எப்படி மேற்கொள்வது; எப்போது அவரை அழைப்பது என்பது குறித்து, ஆலோசிக்க உள்ளோம். ராகுல் பயணம் குறித்து, ஸ்டாலினிடம் தெரிவித்தோம். ராகுலுடன் ஸ்டாலினும் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தோம். இந்த முயற்சிக்கு, தி.மு.க., பாராட்டு தெரிவித்தது. தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. தமிழக தேர்தல் களம் குறித்த நிலவரத்தை அறிய, சோனியா, ராகுல் விரும்பினர். அந்த அடிப்படையில், ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளோம். மற்ற விவகாரங்கள் குறித்து, பின்னர் தெரிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தி.மு.க., - காங்., தலைவர்கள் சந்திப்பு குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகளை, காங்கிரசுக்கு ஒதுக்கினோம் என்றால், அப்போது, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள், கூட்டணியில் இல்லை. தற்போது, அந்தக் கட்சிகள் தலா, 10 'சீட்' கேட்கின்றன. எனவே, காங்கிரசுக்கு, 27 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். தி.மு.க., 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது என, காங்கிரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, காங்கிஸ் தலைவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல், அதிருப்தியுடன் வெளியேறினர்.தி.மு.க., தெரிவித்த தொகுதி எண்ணிக்கை குறித்து, காங்., கோஷ்டி தலைவர்களிடம், இன்று தினேஷ் குண்டுராவ் ஆலோசிக்கிறார். அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில், தி.மு.க., தருகிற தொகுதிகளை ஏற்று, கூட்டணியில் நீடிக்குமா அல்லது காங்., வேறு முடிவு எடுக்குமா என்பது தெரியவில்லை.இவ்வாறு, அறிவாலய வட்டாரங்கள் கூறின.பிரசாரம் துவக்கம்!


சென்னை விமான நிலையத்தில், தினேஷ் குண்டுராவ் பேட்டி:மத்திய அரசின், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், ராகுல் போராட்டம் நடத்தினார். டில்லியில், விவசாயிகள் போராடி வருகின்றனர். விளை பொருட்களுக்கு, நாடு முழுதும் குறைந்தபட்ச விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத வரை, போராட்டம் ஓயாது.தமிழகத்தில், ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை, காங்கிரஸ் துவங்கி விட்டது. பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து, கட்சியினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


கூட்டணியில் யாருக்கு இடம்?ஸ்டாலின் இன்று ஆலோசனை!தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதி பங்கீடு செய்ய, தி.மு.க., விரும்புகிறது. தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டு, காங்கிரஸ், மூன்றாவது அணி அமைக்குமானால், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளை இழுக்கவும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுமானால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தி.மு.க., கூட்டணியில், சில கட்சிகள் இணைவதும், சில கட்சிகள் வெளியேறுவதும் நடக்கலாம். எனவே, கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும்; எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட செயலர்கள் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இன்று நடைபெறுகிறது. மேலும், டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து கட்சிகளின் சார்பில், மத்திய அரசு அலுவலகங்கள் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதா அல்லது தி.மு.க., தனித்து போராட்டம் நடத்துவதா என்பது குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


காங். பேரணி கோஷ்டிகள் புறக்கணிப்புமத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் நேற்று, இரு இடங்களில் ஏர்கலப்பை பேரணி நடந்தது. தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், அதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.சென்னை, ராயப்பேட்டையில் நடந்த ஏர்கலப்பை பேரணியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரது தீவிர ஆதரவாளரும், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சிவராஜசேகரன் தலைமையில் நடந்த பேரணியில், திருநாவுக்கரசர் பங்கேற்கவில்லை. அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சில் பங்கேற்ற தினேஷ் குண்டுராவ், அழகிரி உள்ளிட்டோர், ஏர்கலப்பை பேரணியில் பங்கேற்பர் என, காங்கிரசார் எதிர்பார்த்தனர். ஆனால், தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி ஏற்படாததால், அறிவாலயத்தில் இருந்து நேரடியாக, தினேஷ் தங்கியுள்ள பாம்குரோவ் ஓட்டலுக்கு சென்று விட்டனர்.அதேபோல், வட சென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்த, ஏர்கலப்பை பேரணியையும், கோஷ்டி தலைவர்கள் புறக்கணித்தனர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (23+ 38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
04-டிச-202016:01:04 IST Report Abuse
thulakol ஹைதராபாதில் பூஜ்யம் தமிழ்நாட்டில் ஒரு சீட் அல்லது ரெண்டு சீட் போதும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202004:08:04 IST Report Abuse
J.V. Iyer அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க தலைவர் ரஜனி வந்துவிட்டார். இனி இவர்களைப்பற்றி பேச என்ன இருக்குறது?
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
03-டிச-202020:42:12 IST Report Abuse
naadodi கழுதை தேய்ந்து இப்படி கட்டெறும்பாய் ஆகிவிட்டதே காங்கிரஸ் நிலைமை பரிதாபம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X