பொது செய்தி

தமிழ்நாடு

வயது வந்தோர் கல்வி திட்ட பணிகள் துவக்கம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
உடுமலை : புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் உடுமலை கல்வி மாவட்டத்தில் துவங்கியது.அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், புதிதாக வயது வந்தோர் கல்வி திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்களுக்கும், கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்கள் இலக்காக

உடுமலை : புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் உடுமலை கல்வி மாவட்டத்தில் துவங்கியது.அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், புதிதாக வயது வந்தோர் கல்வி திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்களுக்கும், கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பள்ளிக்கு ஒரு தன்னார்வலர் வீதம் அப்பகுதி மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நவ., இறுதி முதல், திட்டத்தை செயல்படுத்த, தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர்.

அந்தந்த பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளின், மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களின் பட்டியல், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வேலை உறுதி திட்டத்தில் பராமரிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. பாடம் நடத்தப்படும் பள்ளி கற்போம் எழுதுவோம் மையமாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, தன்னார்வலர்கள், அந்தந்த பகுதிகளில் பட்டியலிட்டுள்ள கற்போரை நேரில் ஆய்வு செய்து, அவர்களின் கல்வி நிலையை அறிந்துகொள்ள துவங்கியுள்ளனர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமையாசிரியர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முதற்கட்ட பணியை துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X