பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் உதிரிபாகங்கள் வந்தன

Added : டிச 03, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பஞ்சாப்பில் இருந்து லாரியில் வந்துள்ளது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.இதற்காக, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பஞ்சாப்பில் இருந்து லாரியில் வந்துள்ளது.

கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.இதற்காக, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி முடிந்ததும், அந்த அந்த பள்ளிகளுக்கு இலவச சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டுக்கு, இலவச சைக்கிள் வழங்குவதற்காக பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து, 17 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 748 சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் லாரியில் கொண்டு வரப்பட்டன.இதனை தொடர்ந்து, இரண்டு மாதங்களில் சைக்கிள்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X