அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., ஆட்சியில்தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி'

Added : டிச 03, 2020
Share
Advertisement
அன்னுார் : 'தி.மு.க., ஆட்சியில் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெற்றது' என, துணை பொதுச்செயலாளர் அன்னுாரில் தெரிவித்தார். 'விடியலை நோக்கி' என்னும் தலைப்பில், மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி தி.மு.க., சார்பில், நேற்று அன்னுார் வட்டாரத்தில் நடந்தது. பொன்னே கவுண்டன்புதுாரில், அருந்ததியர் பிரிவு மக்களுடன் கலந்துரையாடல் நடந்தது.இதில் எம்.பி.,யும், துணை பொதுச்செயலாளருமான

அன்னுார் : 'தி.மு.க., ஆட்சியில் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெற்றது' என, துணை பொதுச்செயலாளர் அன்னுாரில் தெரிவித்தார்.

'விடியலை நோக்கி' என்னும் தலைப்பில், மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி தி.மு.க., சார்பில், நேற்று அன்னுார் வட்டாரத்தில் நடந்தது. பொன்னே கவுண்டன்புதுாரில், அருந்ததியர் பிரிவு மக்களுடன் கலந்துரையாடல் நடந்தது.இதில் எம்.பி.,யும், துணை பொதுச்செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் தான், கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைந்தது. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இடைத்தரகர் இல்லாமல், நல்ல விலை கிடைக்க, உழவர் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டதும் தி.மு.க., ஆட்சியில்தான். ஆதிதிராவிடர்களில் அருந்ததியர்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

எனவே அவர்கள் போராட்டம் நடத்தாமலே, தி.மு.க., ஆட்சியில், மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இவ்வாறு செல்வராஜ் பேசினார்.அருந்ததிய மக்களிடம் தெலுங்கில் பேசி ஆதரவு திரட்டினார். பங்கேற்ற மக்களில் பலர் குடிநீர், கழிவு நீர் வடிகால், ரோடு வசதி எதுவும் இல்லை என கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.அன்னுாரில் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திலும் அவர் பேசினார். கூட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முரளிஉள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X