பொது செய்தி

தமிழ்நாடு

பரம்பிக்குளத்துக்கு நீர் திறப்பு சோலையாறு நீர்மட்டம் சரிவு

Added : டிச 03, 2020
Share
Advertisement
வால்பாறை : பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்துதண்ணீர் திறந்துவிடப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வால்பாறையில் பெய்த தென்மேற்குப்பருவமழையில், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. அதனை தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையும், கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு,

வால்பாறை : பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்துதண்ணீர் திறந்துவிடப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

வால்பாறையில் பெய்த தென்மேற்குப்பருவமழையில், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. அதனை தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையும், கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 133.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 142 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,228 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு நீர்மட்டம் சரிந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X