வால்பாறை : வால்பாறையில், 'தேசியம் காக்க... தமிழகம் காக்க' கையேடு வழங்கும் பணியில் பா.ஜ.,வினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஹிந்து தர்மத்திற்கு எதிரானவர்களை அடையாளம் காட்டவும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், தெய்வீக தமிழக சங்கம் துவங்கப்பட்டுள்ளது.இந்த சங்கத்தின் சார்பில், கடந்த மாதம், 20ம் தேதி முதல், வரும் 6ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள, 1.5 கோடி ஹிந்து குடும்பங்களை நேரடியாக சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' என்ற கையேடு வழங்கப்பட்டு வருகிறது.வால்பாறை பா.ஜ., சார்பில் மண்டல தலைவர் சுந்தர் தலைமையில், மண்டல பொதுச்செயலாளர்கள் கார்த்திக், செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் சுனில் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, வீடு வீடாக சென்று கையேடு வழங்கி வருகின்றனர்.
மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் கூறுகையில், ''ஹிந்து குடும்பங்களை நேரடியாக சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு வினியோகம் செய்யப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE