பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் காலமானார்

Added : டிச 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொண்டை மண்டல ஆதீனம் மடம் செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தில், 232வது ஆதீனமாக, திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார், 87, கடந்த, 2000ம் ஆண்டு, பிப்ரவரி, 20ல், பொறுப்பேற்றார். இவருடைய இயற்பெயர் முத்தம்பழம். நவம்பர், 19ம் தேதி, மடத்தின் அறையில் நடந்தபோது, கால் தடுமாறி விழுந்து, தலையில் காயமடைந்தார். அங்கிருந்த சீடர்கள், 20ம்
 காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் காலமானார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொண்டை மண்டல ஆதீனம் மடம் செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தில், 232வது ஆதீனமாக, திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார், 87, கடந்த, 2000ம் ஆண்டு, பிப்ரவரி, 20ல், பொறுப்பேற்றார்.

இவருடைய இயற்பெயர் முத்தம்பழம். நவம்பர், 19ம் தேதி, மடத்தின் அறையில் நடந்தபோது, கால் தடுமாறி விழுந்து, தலையில் காயமடைந்தார். அங்கிருந்த சீடர்கள், 20ம் தேதி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, சென்னையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம், 2:55 மணிக்கு மரணம் அடைந்தார்.

ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல், நேற்று இரவு, தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இன்று மாலை, அவரது உடல், மடத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக, மடம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதுரையை அடுத்த, வாலாந்துார் என்ற கிராமத்தில், முத்து சிதம்பரம் - மீனாட்சி அம்மையார் தம்பதிக்கு, 1943ல், மகனாக பிறந்தார்.

முதுகலை பட்டம் பெற்று, மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், மடத்தின் ஆதீனமாக பொறுப்பேற்ற பின், ஞானப்பிரகாச பரமாச்சாரியாராக அழைக்கப்பட்டார்.தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு, பல இடங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிலங்கள் உள்ளன. இதன் காரணமாக, 2017ல் நித்தியானந்தா சீடர்கள், மடத்தை ஆக்கிரமிப்பு செய்ய வந்தபோது, தகராறு ஏற்பட்டது. தற்போதும், நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், மடத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-202002:02:52 IST Report Abuse
தமிழவேல் 🙏🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X