அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் பேரணி கோஷ்டிகள் புறக்கணிப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில், இரு இடங்களில் ஏர்கலப்பை பேரணி நடந்தது. தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், அதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.சென்னை, ராயப்பேட்டையில் நடந்த ஏர்கலப்பை பேரணியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது தீவிர ஆதரவாளரும், சென்னை கிழக்கு மாவட்ட

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில், இரு இடங்களில் ஏர்கலப்பை பேரணி நடந்தது. தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், அதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

சென்னை, ராயப்பேட்டையில் நடந்த ஏர்கலப்பை பேரணியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது தீவிர ஆதரவாளரும், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சிவராஜசேகரன் தலைமையில் நடந்த பேரணியில், திருநாவுக்கரசர் பங்கேற்கவில்லை.

அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சில் பங்கேற்ற தினேஷ் குண்டுராவ், அழகிரி உள்ளிட்டோர், ஏர்கலப்பை பேரணியில் பங்கேற்பர் என, காங்கிரசார் எதிர்பார்த்தனர். ஆனால், தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி ஏற்படாததால், அறிவாலயத்தில் இருந்து நேரடியாக, தினேஷ் தங்கியுள்ள பாம்குரோவ் ஓட்டலுக்கு சென்று விட்டனர்.அதேபோல், வட சென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்த, ஏர்கலப்பை பேரணியையும், கோஷ்டி தலைவர்கள் புறக்கணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X