சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிபதிகளை விமர்சித்து வீடியோ: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது

Updated : டிச 04, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி சமூகவலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.சென்னை மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன் 62. இவர் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க
நீதிபதி, வீடியோ, கர்ணன், கைது

சென்னை: உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி சமூகவலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.

சென்னை மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன் 62. இவர் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி சமூகவலைதளமான 'யூடியூப்'பில் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து கர்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து கர்ணன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.சில தினங்களுக்கு முன் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கர்ணனை வரவழைத்த போலீசார் வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது கர்ணன் 'அந்த வீடியோவை நான் தான் வெளியிட்டேன்; இனி இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார்.இதற்கிடையில் கர்ணன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 'கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இதுதொடர்பாக டிச. 7ம் தேதிக்குள் டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் .ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.இந்நிலையில் சென்னை ஆவடியில் வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202004:06:21 IST Report Abuse
J.V. Iyer இவருக்கு புத்தி பிசகி விட்டது.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
03-டிச-202021:59:21 IST Report Abuse
Sundararaman Iyer while in service he went 'underground' and was not traceable for quite sometime. And later he took full salary even for the missing period. He always takes shelter under the garb of 'scheduled e' - gross misuse of privileges............
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
03-டிச-202016:07:38 IST Report Abuse
Anand இவனை லாடம் கட்டவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X