டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், உடுமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின், வேளாண் திருத்த சட்டங்களை, எதிர்த்து, டில்லி எல்லையில், விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில், ஈடுபட்டுள்ளவர்களுக்கு, ஆதரவாக, உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, பரமசிவம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய அரசு, வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, கோஷம் எழுப்பபட்டது.பொள்ளாச்சிமத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில் பொள்ளாச்சியில் நேற்று, ஏர்கலப்பை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட காங்., தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் முன்னாள் துணை மேயர் செந்தில்குமார், காங்., நகர தலைவர் அருள், உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின், ஏர் கலப்பையுடன் பேரணியாக சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE