பொது செய்தி

தமிழ்நாடு

புதிய முயற்சி! உழவர் தொடர்புத்திட்டம் அறிமுகம் .... விவசாயிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம் : விவசாயத்தை மேம்படுத்த, வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அடிக்கடி சந்திக்கும் வகையிலான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பபை வலுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் துறையில் செயல்படுத்தப்படும்

பெ.நா.பாளையம் : விவசாயத்தை மேம்படுத்த, வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அடிக்கடி சந்திக்கும் வகையிலான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பபை வலுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களையும், புதிய தொழில் நுட்பங்களையும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல, உழவர் -அலுவலர் தொடர்பு திட்டம் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி வேளாண் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் சென்று விவசாயிகள், உழவர் குழுக்களை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.செயல் விளக்க பயிற்சிகள், பண்ணைப் பள்ளிகள், கண்டுணர்வு சுற்றுலாக்கள் வாயிலாக, நவீன தொழில்நுட்பங்களையும் செயல்பாடுகளையும், விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் எடுத்துக்கூறுவர். ஒவ்வொரு ஊராட்சியிலும், குறைந்தபட்சம், 10 முன்னோடி விவசாயிகளை, தேர்வு செய்து, தொழில் நுட்பம், மானிய திட்டம் குறித்த பயிற்சியும் அளிப்பர்.

வேளாண் உதவி இயக்குநர் தலைமையில், பல்கலை விஞ்ஞானி, வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் உள்ளடக்கிய வட்டார அளவில், வேளாண் விரிவாக்க குழு அமைக்கப்பட்டு, மாதந்தோறும் பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும். பயணத்திட்ட விவரம், ஆண்டுதோறும் ஏப்., அக்., மாதங்களில் முதல் தேதிக்கு முன், விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.உதவி வேளாண் அலுவலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், வேளாண் அலுவலர் அல்லது துணை வேளாண் அலுவலர்கள் மாதம் ஒரு முறையும், விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவர்.

வட்டார வேளாண் விரிவாக்க அலுவலர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கிராமங்களுக்கு பயணம் செய்து, ஆய்வு மேற்கொள்வர்.ஒவ்வொரு ஊராட்சியிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், அரசு அலுவலகம், கிராம பொது கட்டடங்கள், முன்னோடி விவசாயிகளின் இடங்களில் ஏதேனும் ஒன்றில் வார நாட்களில் கூடும் இடம் நிர்ணயம் செய்து, அது குறித்த தகவல்களை 'வாட்ஸ் ஆப்' அஞ்சல் வாயிலாக, விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களின் பயன்பாட்டுக்காக பிரத்யேக செல்லிடப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய திட்டம் வாயிலாக, அதிக நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் கருதுகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குநர் நிர்மலா கூறுகையில், '' விவசாயிகள், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உழவர், அலுவலர் தொடர்பு திட்டத்தில் பங்கேற்று, கிராமத்துக்கு வரும் வேளாண் அலுவலர்களின் ஆலோசனை தொழில்நுட்பம், நலத்திட்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், விவசாயத்துறை மேலும் வலுவடையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X