ஊட்டி, : 'ஊட்டி நகரில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், பயன்பாட்டுக்கு வந்ததால், அபராதத்திலிருந்து தப்ப வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றி உஷாராக வாகனத்தை இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகரில் முக்கிய பகுதியாக உள்ள சேரிங கிராஸ் சந்திப்பு; கூடலுார் சாலை; கமர்சியல் சாலை; கோத்தகிரி சாலை; குன்னுார் சாலை சந்திக்கும் இடங்களில் போக்குவரத்து விதிமீறல்கள், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின், எண்; தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு அவர்களின் முகவரி அல்லது மொபைன் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி, விதி மீறல்கள் தொடர்பான தகவல் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தை எஸ்.பி., சசி மோகன் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE