ஊட்டி : நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தப்படி, உருளைக்கிழங்கு சாகுபடியில், விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சராசரியாக, 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்கு, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தாலும், காலநிலை மாற்றம், மோசமான விதை மற்றும் 'இலை பேன்' நோய் தாக்குதலால், பல ஏக்கரில் பயிரிட்ட உருளைக்கிழங்கு அறுவடைக்கு முன்பே வீணானது. கடந்த பல ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில், உருளைக் கிழங்கு விவசாயம், 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், உருளைக் கிழங்கு, மேட்டுப்பாளையம் சந்தைக்கு குறைந்தளவே கொண்டு செல்லப்படுகிறது.
ஊட்டி உருளைக் கிழங்கு மகசூல் குறைந்ததால், ஆக்ரா, இந்துாரில் இருந்து உருளைக்கிழங்கு கள், மேட்டுப்பாளையம் சந்தைக்கு வர துவங்கியுள்ளன.தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில்,'உருளைக்கிழங்குக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கோவை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கள ஆய்வு நடத்தி சென்றனர். அறிக்கை வந்த பின், அவர்கள் தெரிவிக்கும் அறிவுரைப்படி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பிளாக்குகளில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE