சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள திருமணம் செய்தவருக்கு வெட்டு முதல் கணவனுக்கு வலை

Added : டிச 03, 2020
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி அருகே, தனது மனைவியை, கள்ள திருமணம் செய்தவரை வெட்டி தலைமறைவான, முதல் கணவனை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், 40. இவரது மனைவி சந்தியா, 25. இவர்களுக்கு, மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. செல்வகுமாருக்கு, குடிப்பழக்கம் உள்ளது. இவரது உறவுக்காரரான, மாரிமுத்து என்பவருக்கும், சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, தனது மனைவியை, கள்ள திருமணம் செய்தவரை வெட்டி தலைமறைவான, முதல் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், 40. இவரது மனைவி சந்தியா, 25. இவர்களுக்கு, மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. செல்வகுமாருக்கு, குடிப்பழக்கம் உள்ளது. இவரது உறவுக்காரரான, மாரிமுத்து என்பவருக்கும், சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன், திருமணம் செய்து கொண்டு, செல்வகுமாருக்கு தெரியாமல், கோத்தகிரி சோலுார் மட்டம் அருகே வசித்து வருகின்றனர். இதனை அறிந்த செல்வகுமார், நேற்று முன்தினம் இரவு அம்பாள் காலனிக்கு வந்து, மாரிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால், மாரிமுத்துவின் பின்புற கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த சோலூர் மட்டம் போலீசார், தலைமறைவான செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X