தேனி:மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.25.66 லட்சம் மோசடி செய்த கம்பம் ரஞ்சித்குமார் 27, சேலம் ஹரிஹரன் 26, குமரன் 27, மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி டொம்புச்சேரி கண்ணன் 26. டிப்ளமோ இன்ஜினியரிங் பட்டதாரி. இவரின் கல்லுாரி நண்பர்கள் வீரமணி 28, பிச்சைமணி 27, ரஞ்சித்குமார் 29. இந்நிலையில் கம்பம் ரஞ்சித்குமார் 30, தனக்கு விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் காசாளராக பணி கிடைத்துள்ளது என அதற்கான கடிதத்தை நண்பர்களின் வாட்ஸ் - ஆப் குழுவில் பதிவிட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் ஹரிஹரன், பட்டைகோவில் குமரன் மூலம் வேலை கிடைத்ததாக கண்ணனிடம் தெரிவித்தார்.இதனை நம்பிய கண்ணன், தனக்கும் வேலை வாங்கித்தருமாறு ரஞ்சித்குமாரின் வங்கி கணக்கில் ரூ.3.47 லட்சத்தை செலுத்தினார். அவரின் உறவினர்களான வெங்கடேஷ், அருண்குமார், உடன் படித்த வீரமணி, அவரின் அக்கா நித்யா உள்ளிட்ட 8 பேர் தனித்தனியாக ரூ.22 லட்சத்து 19 ஆயிரத்து 500ஐ மூவரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்.
மொத்தம் ரூ.25.66 லட்சத்தை பெற்றுக் கொண்டவர்கள் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தனர். தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரஞ்சித்குமார், ஹரிஹரன், குமரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE