கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயறு வகைப்பயிர்களில், தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சி, தொண்டாமுத்துாரில் நடந்தது.
விதை மைய இயக்குனர் சுந்தரேஸ்வரன், தரமான விதையின் முக்கியத்துவத்தையும், தரமான விதை உற்பத்தி மூலம் விவசாயிகள் லாபம் ஈட்டும் முறையையும் எடுத்துரைத்தார். பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கீதா, அதிக மகசூல் தரக்கூடிய பயறு வகைப்பயிர் ரகங்களையும், அதன் குணாதிசயங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பூச்சி, நோய் மேலாண்மை, உழவியல் தொழில் நுட்பங்கள் குறித்தும் பேராசிரியர்கள் விளக்கமளித்தனர். விதை அறிவியல் துறை இணை பேராசிரியர் லட்சுமி, பயறு வகைத்துறை பேராசிரியர் ஞானமலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE