கோவை : ஆனைகட்டி பகுதியில்,ரேஷன்கடைகளை நடத்த இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடி மகளிர் சுய உதவிக்குழுவினர், மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைக்கட்டி, ஆலமரமேடு ரேஷன் கடையை கடந்த, 26 ஆண்டுகளாக எவ்வித பிரச்னைகளும் இல்லாமல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் இணைந்து நடத்தி வருகிறோம்.நேற்று முன்தினம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மூவர், ரேஷன்கடையை அவர்களிடம் ஒப்படைக்க கோரி, பிரச்னை ஏற்படுத்தினர். கேரள மாநிலத்துக்கு அரிசி கடத்தும் நோக்கிலே, இப்பிரச்னையை எழுப்பியுள்ளனர். இதனை தடுத்து, வழக்கம் போல் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE