கோவை : கோவை, காரமடை, மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் நல்ல மழை பெய்து இருப்பதால், விவசாயிகள் பயறு வகை பயிர்களை அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
காரமடை, மேட்டுப்பாளையம், சின்னகள்ளிபட்டி, இரும்பொறை, மூடுதுறை மற்றும் சிறுமுகை பகுதிகளில், வம்பன்- 6, வம்பன் - 8 பாசிப்பயறு - கோ-8 தட்டைப்பயறு, துவரை மற்றும் கொள்ளு பயறு ரகங்களை விவசாயிகள் பயிட்டுள்ளனர்.உயர் விளைச்சல் தரக்கூடிய, பயறு ரகங்களை கொண்டு விதைப்பண்ணை அமைக்க வேண்டும் என, கள ஆய்வு செய்த கோவை மாவட்ட விதைச்சான்று துறை துணை இயக்குனர் வானதி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து காரமடை வட்டார விதைச்சான்று அலுவலர் கண்ணாமணி கூறுகையில், ''பதிவு செய்த விதைப் பண்ணைகள் மூலம் பெறப்படும் விதைகள், சுத்திகரிப்பு செய்து, உரிய சான்று பணிகள் செய்யப்பட்டு, சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு அரசு மானியத்துடன் கொள்முதல் செய்யப்படும்.விவசாயிகள் இது குறித்த விபரங்களை, அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை, புகைப்படம் மற்றும் ஆதார் எண், நிலவரை படம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் அணுகி பயன் பெறலாம்.'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE