கோவைபுதுார் : கோவைபுதுாரிலுள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.
கோவை புதுாரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காவது பட்டாலியன் உள்ளது. இங்குள்ள தற்காலிக பயிற்சி பள்ளியில், 2019-ல் சீருடை பணியாளர் தேர்வில் தேர்வு பெற்ற, 445 இரண்டாம் நிலை போலீசாருக்கான பயிற்சி, மே மாதம் துவங்கியது. கவாத்து, சட்டம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.பயிற்சி நிறைவு விழா, பள்ளி முதல்வர் உமையாள் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., ரவி பேசுகையில், ''பயிற்சி முடித்தவர்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயலாற்ற வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ஏழை, எளியோரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு சேவை செய்வதே நம் கடமை. மது, போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாக கூடாது. போதைக்கு அடிமையானவர்களை திருத்த வேண்டும்,'' என்றார்.முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று பேருக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE