திருப்பூர் : ''அ.தி.மு.க., தலைமையின், ஐந்து கட்டளைகளை, டிச., 10க்குள் நிறைவேற்ற வேண்டும்,'' என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, கருவம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட, ஐந்து வார்டுகளில், அவர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஆட்டோர ரிக் ஷா சங்க கிளையை துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் பேசுகையில், 'ஒவ்வொரு 'பூத்'திலும், 18 பேர் கொண்ட 'பூத் கமிட்டி', 20 பெண்கள் அடங்கிய, மகளிர் கமிட்டி, 25 இளைஞர், இளம்பெண்கள் கமிட்டி, பூத் முகவர், தகவல் தொழில்நுட்ப கமிட்டி என, ஐந்து கமிட்டி அமைக்கும் பணியை, டிச., 10க்குள் முடிக்க வேண்டும். தலைமையின் ஐந்து கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்,' என்றார்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், அமைப்பு செயலாளர் சிவசாமி, அவை தலைவர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் மணி, முத்துசாமி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE