லாட்டரி விற்பனை ஜோர்திருப்பூர் - தாராபுரம் ரோடு, கே.செட்டி பாளையம் பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. பல குடும்பங்கள், இதனால் பாதிக்கப்படுகின்றன. போலீசார், லாட்டரி விற்பனை கும்பலை பிடிக்கவேண்டும்.- ஆர்.பாரதிராஜா, கே.செட்டிபாளையம்.தெருநாய் தொல்லைதிருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் தெருநாய் அதிகம் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை, கடிப்பதற்காக துரத்துகின்றன. நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.- விஸ்வநாதன், வேலம்பாளையம்.
வீட்டுக்குள் புகும் கழிவுநீர்திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு ராஜம்மாள் லே-அவுட் பகுதியில், சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை நாட்களில், கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. கால்வாயை சரிசெய்ய வேண்டும்.- ஈஸ்வரி, திருப்பூர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE