பொது செய்தி

தமிழ்நாடு

ரேசன் பொருள் விற்பனையாளராக முதுகலை பட்டதாரிகளும் தயார்!

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : ரேசன் கடை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பும் நேர்காணலில், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்களும் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில், தகுதியானவருக்கு நேர்காணல்

திருப்பூர் : ரேசன் கடை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பும் நேர்காணலில், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்களும் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில், தகுதியானவருக்கு நேர்காணல் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள, விற்பனையாளர் சங்கத்தில் நேற்று, நேர்காணல் துவங்கியது.இதுகுறித்து, இணை பதிவாளர் பிரபு கூறுகையில், ''விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்க அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சான்றிதழ்களை சரிபார்த்து, நேர்காணல் நடத்தி வருகின்றனர். இன்று (நேற்று) துவங்கிய நேர்காணல், 15ம் தேதி வரை, பணி நாட்களில் நடக்கும். தகுதியானவர்கள், பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படுவர்,'' என்றார்.கடிதம் கிடைக்கலையா?ரேஷன் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பித்தவருக்கு, நேர்காணலுக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அழைப்பாணை கிடைக்காதவர்கள், கலெக்டர் அலுவலக, 4வது தளத்தில் உள்ள, பொது வினியோக திட்ட துணை பதிவாளரை 0421 29711873 அணுகி, அழைப்பாணை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X