திருப்பூர் : ஊராட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டோருக்கான, கிராம ஊரக வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊரக உள்ளாட்சிகளில் பதவியேற்றுள்ள நிர்வாகிகளுக்கு, அடிப்படை மற்றும் நிர்வாகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கிராம ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. மாவட்டந்தோறும், அந்தந்த ஒன்றியங்களில், ஊராட்சி தலைவர், துணை தலைவர், செயலாளர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில், மூன்று முதல் ஐந்து ஊராட்சிகளுக்கு, தலா, இரண்டு நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 13 ஊராட்சிகளுக்கான, பயிற்சி முகாம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும், மங்கலம், ஈட்டிவீரம்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சிகளுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.பி.டி.ஓ.,கள் சாந்தாலட்சுமி, மணிகண்டன் ஆகியோர், பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர். பட்டியலில் கூறியுள்ளபடி, நான்கு பிரிவுகளாக பயிற்சி முகாம் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE