அவிநாசி : அவிநாசி வட்டாரத்தில், காப்பீடு செய்ய அனுமதி பெற்ற பயிர்கள் குறித்து, வேளாண் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
அவிநாசி, வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை:அவிநாசி வட்டாரத்தில், சேவூர் பிர்காவில் உள்ள விவசாயிகள் மட்டும், நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, 433.50 ரூபாய் பிரீமிய தொகை செலுத்தும் பட்சத்தில், காப்பீடு தொகையாக, 28 ஆயிரத்து 900 ரூபாய் கிடைக்கும். ஜனவரி மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், சோளம் பயிருக்கு காப்பீடு செய்யலாம். ஏக்கருக்கு, 34 ரூபாய் செலுத்தினால், காப்பீடு தொகையாக, 2,263 ரூபாய் கிடைக்கும். டிசம்பர், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அவிநாசி மேற்கு மற்றும் சேவூர் பிர்காவில் உள்ள விவசாயிகள், கரும்பு சாகுபடிக்கு காப்பீடு பெறலாம். ஒரு ஏக்கருக்கு பங்கு தொகையாக, 2,875 ரூபாய் செலுத்தும் பட்சத்தில், காப்பீடு தொகையாக, 57 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE