'ராமர் கோயில் இயக்கத்துக்கு வித்திட்டது காங்கிரஸ்தான்'

Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்துக்கு வித்திட்டதே காங்கிரஸ்தான்' என பிரபல எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான வினய் சீதாபதி எழுதியுள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 டிச. 6ல் வி.எச்.பி. - பா.ஜ.

புதுடில்லி:'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்துக்கு வித்திட்டதே காங்கிரஸ்தான்' என பிரபல எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான வினய் சீதாபதி எழுதியுள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 டிச. 6ல் வி.எச்.பி. - பா.ஜ. மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. நீண்ட காலம் நடந்த வழக்குகளில் 'ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ராமர் கோவிலை கட்டலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளில் வி.எச்.பி. பா.ஜ. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கட்சிகள் தீவிரம் காட்டின. இந்நிலையில் 'ராமர் கோவில் இயக்கத்துக்கு வித்திட்டது காங்கிரஸ்தான்' என வினய் சீதாபதி எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.'ஜூகல்பந்தி - மோடிக்கு முன் பா.ஜ.' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு பேட்டிகள் வரலாற்று ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த 1983ல் உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகரில் வி.எச்.பி. மாநாடு நடந்தது. அதில் காங்கிரசைச் சேர்ந்த மாநில அமைச்சராக பணியாற்றிய இருபதாம் நூற்றாண்டில் துளசிதாசர் என்று கூறிக் கொள்ளும் தாவ் தயாள் கன்னா பங்கேற்றார். மேலும் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா அமைச்சரவையில் பணியாற்றியவரும் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தாவும் பங்கேற்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தை துவக்க வேண்டும் என அவர்கள் அப்போது பேசினர். இதை பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியும் உறுதி செய்துள்ளார். வட இந்தியாவின் மூன்று இடங்களில் ஹிந்துக் கோவில்களை இடித்து விட்டு மசூதிகள் கட்டப்பட்டு உள்ளதாக கன்னா கூறினார். அவர் குறிப்பிட்டது கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா, காசியில் சிவன் கோவில், அயோத்தியில் ராமர் பிறந்த இடம். இந்த இடங்களில் உள்ள மசூதிகளை இடித்து விட்டு கோவில்கள் கட்ட வேண்டும் என கன்னா குறிப்பிட்டார்.

மேலும் 1983ல் ஹிந்துக்கள் வழிபாடு செய்ய பாபர் மசூதியை திறந்து விடுவது குறித்து பிரதமராக இருந்த இந்திராவும் அவருடைய மகன் ராஜிவும் திட்டமிட்டனர். அவர்களுடைய ஆதரவுடன்தான் 1986ல் ஹிந்துக்கள் வழிபடுவதற்கு பாபர் மசூதி திறக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
03-டிச-202003:26:29 IST Report Abuse
Baskar ஆமாம் இந்தியாவில் எல்லா கட்டிடங்கள் மேலாதிகள் றார் கோவில்கள் மாற்று பெரிய பெரிய தொழிற்சாலைகள் விவசாயிகளின் நலன்கள் பெரிய திட்ட அமுல் படுத்து தாழ் எல்லாமே காங்கிரஸ் செய்தது தான். அதே போல் தமிழகத்தில் அணைகளை கட்டியது மக்களுக்கு தவறாமல் தொடர்ச்சியாக தண்ணீர் கிடைத்தது வேளாண் துறை முன்னேறியது பாலங்கள் கட்டியது கழிப்பறைகள் கட்டியது எல்லாமே தி.மு.க ஆட்சியில் தான் என்று ஒரு அறிக்கையையும் சேர்த்து சொல்லுங்கள். இது என்ன காசா பணமா வாய்க்கு வந்ததை போகிற வழியில் சொல்லி விட்டு போக வேண்டியது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X