திருப்பூர் : திருப்பூர் அருகே 63 வேலம்பாளையம் மூனுமடை கிராமத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்ட நிகழ்ச்சியில், 1,008 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் என்ற நடப்பாண்டு இலக்கு, எட்டிப் பிடிக்கும் துாரத்தில் இருக்கிறது. வழக்கம் போல் இந்தாண்டும், இலக்கை மிஞ்சிய பயணமாக தான் அமையும் என, பசுமை ஆர்வலர்கள் பரபரப்பாக இயங்குகின்றனர். 6 வது திட்டத்தின், 84வது நிகழ்ச்சி, பல்லடம், 63 வேலம்பாளையம் மூனுமடையில் நேற்று நடந்தது. தெற்கு தோட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 1,008 மரக்கன்றுகள் நடப்பட்டன.நில உரிமையாளர் செல்வராஜ், பத்மாவதி, சஞ்சய், சூரிய பிரகாசு, சவுந்தர்ராஜன், அஸ்வின், மிதுன், சிவா, புகழரசி, காளிமுத்து, தினேஷ், வினோத் மற்றும் திட்டக்குழுவினர் இணைந்து, மரக்கன்று நட்டனர். ஒரு ஏக்கர் பரப்பில், 1,000 தைலமரம், ஏழு இலுப்பை மரம் மற்றும் ஒரு அத்திமரம் என, 1,008 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தங்களது நிலத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE