திருப்பூர் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நேற்று திறக்கப்பட்டது.
கொரோனாவால், தமிழகத்தில் கடந்த, எட்டு மாதங்களாக பள்ளி, கல்லுாரி மூடப்பட்டுள்ளன. தற்போது, தளர்வுகளுடன் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதன்படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் மாணவர்களுக்கான வகுப்பு நேற்று முதல் துவங்கியது. முதல் கட்டமாக அறிவியல் பாடத்துறையில் முதுகலை பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு துவங்கியது. அதில், 92 மாணவ, மாணவியர் கல்லுாரிக்கு சென்றனர்.இது குறித்து கல்லுாரி முதல்வர் டாக்டர். கிருஷ்ணன் கூறுகையில், ''கல்லுாரியில் உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு உள்ளோம். கல்லுாரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையும் போதே தெர்மல் ஸ்கேனர் கொண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 'சானிடைசர்', முக கவசம் பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்பு நடந்தது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE